போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போரில் கைப்பற்றிய பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நான்கு முக்கிய உக்ரைன் நகரங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த 4 நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்திய நிலையில் இந்த வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 98.4 சதவீதம் பேர் இந்த 4 நகரங்களை ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உக்ரைனில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த 4 நகரங்களை இணைப்பது குறித்து புதின் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.