மகனை காதல் செய்யுமாறு மாணவியை மிரட்டிய ஆசிரியை!

Filed under: தமிழகம் |

ஆசிரியர் ஒருவர் தன் மகனை காதலிக்கவில்லை என்றால் பரிட்சையில் பெயிலாக்கி விடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.

உடுமலைபேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த வகுப்பின் ஆசிரியராக சாந்திபிரியாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். சாந்திபிரியாவின் மகன் அந்த 12ம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். காதலை மாணவி மறுத்துள்ளார். ஆனால் தனது மகனை காதலிக்க வேண்டும் என அம்மாணவியை வகுப்பாசிரியை சாந்திபிரியா மிரட்டியுள்ளார். அடிக்கடி மருமகளே என அந்த மாணவியை அழைத்ததோடு தனது மகனிடம் பேச சொல்லி மாணவியை வற்புறுத்தியும் உள்ளார். தனது மகனிடம் பேச மறுத்தால் மாணவியின் மதிப்பெண்களில் கை வைப்பேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியை சாந்திபிரியாவை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.