பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறிய நாடான உக்ரைனுடன் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இப்போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. சமீபத்தில், உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புதின் அறிவித்தார். ஏற்கனவே, உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளதாக பிரதமர் அலுவகத்திலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. அதில், தூதரகம் மூலம் பேச்சுவார்த்தை தொடர் வேண்டும். ராணுவ நடவடிக்கையால் எதற்கும் தீர்வு காணமுடியாது. போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எப்போதும் வலியுறுத்துவதாகவும், இந்தப் போரால் சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது.