இலங்கையில் 25 வயது இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் – யார் அவர்?

Filed under: உலகம் |

இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் சென்ற வாரம் நடந்தது. அந்த தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி 225 இடங்களில் 145 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த புதிய நாடாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று கண்டியில் நடைபெற்றது. இதில் நிதியின் நகர அபிவிருத்தி மத விவகாரம் நுட்பத்துறை மகிந்த ராஜபக்ச ஏற்று கொண்டார். இதன் பின் கோத்தபய ராஜபக்சவின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சேவிற்கு நீர்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை கொடுக்கப்பட்டது. இவருடைய மகன் ஷாசீந்திர ராஜபக்சேவிற்கு உயர் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டது.

இதை போலவே; மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அளிக்கப்பட்டது. இதுவரை மகிந்த ராஜபக்சேவின் குடும்பத்தில் இருந்து நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி உள்பட நான்கு தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர்.

மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டைமான் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். ஜீவன் தொண்டைமானுக்கு 25 வயதுதான் ஆகிறது. எஸ்டேட் குடியிருப்பு மற்றும் சமூக கட்டமைப்பு வளர்ச்சி துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜீவன் தொண்டைமான் மலையாள தமிழர்கள் வசிக்கும் நுவரா – எலியா பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.