ராக்கெட்ராஜா
கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை என்பவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நடுநந்தன்குளம் விக்டர் வயது 21, கோதைசேரி முருகேசன் வயது 23, தச்சநல்லூர் தாராபுரம் சஞ்சீவிராஜ் வயது 25, ஸ்ரீராம்குமார் வயது 21, ஆனந்த் வயது 21 உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரு சமூக ரீதியாக நடந்த இந்த கொலை வழக்கில் பனங்காட்டு படை கட்சியின் நிறுவனர் தலைவர் ராக்கெட் ராஜாவும் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
ராக்கெட் ராஜா விமான மூலம் திருவனந்தபுரத்திற்கு வருவதாக நாங்குநேரி காவல்துறை ஏ.எஸ்.பி. ரஜத்சதுர்வேதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருநெல்வேலி ரூரல் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையிலான சென்ற போலீசார், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பதுங்கி இருந்தனர்.
ராக்கெட் ராஜா விமான நிலையத்திற்குள் இருப்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அதிரடியாக ராக்கெட் ராஜாவை கைது செய்து தங்களது கஸ்டடிக்கு கொண்டு வந்தனர்.
மதியம் சுமார் 3-15 மணிக்கு நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலை வழக்கில், தீவிர விசாரணைக்கு பின் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி விட்டு பின்பு, கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைக்கு ராக்கெட் ராஜா கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை சட்டரீதியாக அவரை வெளியில் கொண்டுவர அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் பம்பரமாக வேலை செய்து வருவதாக பனங்காட்டுப்படை கட்சியின் தொண்டர்கள் கூறுகிறார்கள்.