13 கிராம மக்களும் பரந்தூரில் அமைக்கப்போகும் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திடீரென வாபஸ் பெற்றுள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் இங்கு விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடினர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.