சொகுசு கார் ஒன்று சென்னை கோயம்பேடு அருகே திடீரென பற்றி எரிந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் கார் முழுவதிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த அனைத்து பாகங்களும் தீயில் எரிந்து சாம்பலானதோடு சில பாகங்கள் வெடித்து சிதறியது. இதன் காரணமாக கோயம்பேடு சென்ட்ரல் செல்லக்கூடிய சாலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related posts:
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் - அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ...
சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - வேல்முருகன்!
#BREAKING: CSK அணியில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!



