தனுஷ் படத்தின் முதல் சிங்கில்!

Filed under: சினிமா |

“வாத்தி” திரைப்படத்தின் முதல் சிங்கிலின் சில பகுதிகளை நடிகர் தனுஷ் பாடிட, அதற்கு, ஜிவி பிரகாஷ் பியானோவில் வாசிக்கும் வீடியோவை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் “வாத்தி.” இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 10ம் தேதி வெளியாகுமென இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ள நிலையில், இப்பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இப்பாடல் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் ஒரு சிறு பகுதியை இன்று, “ஒரு தலை காதலை தந்த. இந்த தறுதல மனசுக்குள் வந்த” என்று தனுஷ் பாட, அதற்கு ஜிவி பிரகாஷ் தன் பியானோவில் இசை மீட்டினார். இந்த வீடியோவை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் தனுஷுடன் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சாய்குமார், சமுத்திரகனி உட்பட பலர் நடித்துள்ளனர்.