இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “ரஜினி முருகன் 2” திரைப்படத்துக்கான திரைக்கதை வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய “ரஜினி முருகன்” திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான “சீமராஜா” திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து இந்த கூட்டணி பிரிந்தது. இப்போது இயக்குனர் பொன்ராம் “ரஜினி முருகன் 2” திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் “ரஜினி முருகன்” மற்றும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” ஆகிய படங்களின் கதாபாத்திரங்களை இணைத்து ‘பொன்ராம் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ ஆக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கும் விதமாகவும், ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.