ஈ.சி.ஆர் – ஓ.எம்.ஆரில் 180 கோடியில் மேம்பாலம்!

Filed under: சென்னை |

ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இரண்டு பாதைகள் சென்னையிலிருந்து புதுவை செல்ல பயன்படுத்தப்படும் பாதைகள். இந்த இரண்டு பாதைகளை சென்னையுடன் இணைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் ரூபாய் 180 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து விரைவில் சென்னையிலிருந்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்க புதிய மேம்பாலங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.