சென்னை மெட்ரோவின் அறிவிப்பு!

Filed under: சென்னை |

சென்னை மெட்ரோ இனி வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது.

தினமும் சென்னை மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் கியூஆர் ஸ்கேன் செய்து ரயிலில் பயணம் செய்யலாம் என்ற வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப் மூலமும் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம் என்றும் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்து பணம் செலுத்தும் முறையை அதிகப்படுத்தப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.