சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்ட மசோதா குறித்த வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் தற்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று மூன்று நீதிபதிகளும் செல்லாது என்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இந்த தீர்ப்பை ஆதரித்து வந்தனர்.