கேரளா அரசு தியேட்டரில் அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கைக்குழந்தையுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் திடீரென குழந்தை அழுதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இவர்களுடைய நலன் கருதி கண்ணாடியால் மூடப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த அறையில் குழந்தை அழுதாலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காதாம். குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்காதவாறு அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய பொருள்களும் இந்த அறையில் கிடைக்கும். அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு திரையரங்குகளில் மட்டும் இந்த அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தனியார் திரையரங்குகளிலும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு: இந்தி படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை !
ஷங்கர் மகளை தாக்கி பதிவிட்ட பிரபல நடிகை!
ஸ்ரீ ராமர் மீது இருக்கும் பக்தியை காட்டிய நடிகை சுகன்யா - நெற்றியில் ராமரை பொட்டாக இட்டு அசத்தினார்!
*அரவிந்த் கெஜ்ரிவால்-ன் ஐபோனை திறக்க உதவி கோரிய அமலாக்கத்துறை.. கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்.



