உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் ஒரு தம்பதியனருக்கு பிறந்த இரட்டைக் ஆண் குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர் வைத்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது.
இந்த சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொவிட், கொரோனோ, லாக் டவுன் போன்ற பெயர்களை பெற்றோர்கள் வைத்துள்ளனர்.
தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் தர்மேந்திர குமார் மற்றும் அவருடைய மனைவி ரேணு ஆகியோருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் மக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பெயர் வைத்துள்ளளோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.