இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நடனத்தை மின்சார கம்பி மேல் ஏறி செய்த இளைஞர் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இளைஞர்களிடையே தற்போது பெருமளவில் ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதிக லைக்குகளை பெறுவதற்காக உயரமான மலைகள், ரயில் தண்டவாளங்கள் என ஆபத்தான இடங்களில் இளைஞர்கள் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அதன் மூலம் மோசமான விபத்துக்குளுக்கு உள்ளாகும் சம்பவமும் நடந்து வருகிறது. தற்போது உன்னாக்குளம் பகுதியில் ஒரு இளைஞர் மின்சார கம்பம் மீது ஏறி ‘தெம்மா தெம்மா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவாக பதிவிட்டுள்ளார். அச்சமயம் அதில் மின்சாரம் பாயாததால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். அதை டுவிட்டரில் ஒருவர் பகிர்ந்து மின்சாரவாரியத்திற்கு டேக் செய்துள்ளார். அதை தமிழ்நாடு காவல்துறைக்கு மின்சாரவாரியம் டேக் செய்துள்ளனர். அந்த குறிப்பிட்ட இளைஞர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் சிக்குவது குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.