மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி உளள் சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மையம் கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இன்று காலை திடீரென அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி கடைசியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தீ கொளுந்துவிட்டு 3 மணி நேரமாக எரிந்ததில் பல முக்கிய ஆவணங்கள், கணினிகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.