சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு சில அரசியல் கட்சிகள் கூறிய நிலையில் நான்கு சுவற்றுக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யாரையும் சீண்டாமல் விதிகளை கடைபிடித்து பேரணியை நடத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும் கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நான்கு சுவற்றுக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.