கடந்த 10 மாதங்களில் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு புதிய உச்சம் அடைந்துள்ளதாகவும், 20% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 29.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஜனவரியில் மொத்த நிலுவைத் தொகை 1,86,783 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிரெடிட் கார்டு பயன்பாட்டின் புதிய உச்சம் ஆகும். இது கடந்த ஆண்டு ஜனவரியில் 1,41,254 கோடி ரூபாயாக நிலுவை தொகை இருந்த நிலையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 20 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் ஆன்லைன் வர்த்தகம் எழுச்சி பெற்றுள்ளதாகவும், கிரெடிட் கார்டு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.