இந்தியாவின் மேற்கு பிரிவு விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமனம்!

Filed under: இந்தியா |

லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி கொண்டிருக்கும் சமயத்தில் இந்தியாவின் மேற்கு பிரிவின் விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் இந்தியாவின் கிழக்கு படைப்பிரிவின் மூத்த தளபதியாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மேற்கு படைபிரிவின் புதிய தளபதியாக பதவி ஏற்கிறார்.

மிக் -21, மிக் – 23எம்.எப், மிக்-29, எஸ்யூ-30எம்.கே.ஐ உள்பட அதிநவீன போர்விமானங்களை இயக்கி இருக்கிறார். பின்னர் ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையில் இணைத்து இருக்கிறார்.