பெங்களூருவில் தனியார் பைக் டாக்ஸிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நாடு முழுதும் தனியார் செயலிகள் மூலம் பைக் டாக்சி இயங்கி வருகிறது. ஆட்டோவில் செல்வதை விட இதில் பாதிக்கும் குறைவான கட்டணம் என்பதால் பலரும் இதையே பயன்படுத்தி வருகின்றனர். பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க கோரி பெங்களூர் ஆட்டோ டிரைவர்கள் இன்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, போராட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஆக்டோ டிரைவர்கள் கூறிய போது ரேபிடோ உள்ளிட்ட தனியார் பைக் டாக்ஸி காரணமாக எங்களுக்கு வருவாய் குறைந்துள்ளது என்றும் எனவே பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார். ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுனர் ஒருவரை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடுமையான தாக்கியதை அடுத்து ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.