புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி எங்களுக்கு அதிகாரமும் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியது. புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதால் இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை மாநில அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும் அந்த பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பின்னால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும். இது குறித்து முதலமைச்சர் கூறும்போது “மாநிலத்தில் என்ன பணிகள் நடக்கிறது என்று கூட அதிகாரிகள் சொல்வதில்லை, சில கோப்புகள் கூட அரசுக்கு வருவதில்லை எங்களுக்கு இன்னும் முழு அதிகாரம் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை மத்திய அரசிடம் வலியுறுத்தியே சில பணிகளை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.