ரூ.33 கோடியை பிரேக் அப் ஆன காதலர்களுக்கு கவுன்சிலிங்கிற்கு ஒதுக்கி உள்ளது நியூஸிலாந்து அரசு.
காதலிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காதல் தோல்வியடைந்தால் மனமுடைந்து விடுகின்றனர். இதனால் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். காதல் தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சாரக் குழுவை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு 33 கோடி ஒதுக்கி உள்ளது. காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வர ஆலோசனை வழங்குவது, இளைஞர்களை மனம் திறந்து பேச வைப்பது ஆகியவைதான் இந்த பிரச்சார குழுவின் வேலை. நியூஸிலாந்து அரசின் இந்த முயற்சிக்கு அந்நாட்டு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.