அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருவருக்கும் கொரோனா உறுதியானது. இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு முன்பு ஏப்ரல் மே மாதத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரச்சாரம் செய்த பிரேசில் அதிபர் போல்ஸனாரோவும் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு குணமடைந்தார்.
பின்னர் கடந்த ஜூன மாதம் ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ் மற்றும் அவருடைய மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இருவருக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டு குணமடைந்தனர்.
இதை போல கவுதமாலா நாட்டின் அதிபர் அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி, பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ஜீன்னி அனிஸ், டோமினிக அதிபர் ஜனாதிபதி லூயிஸ் அபிநடர், ஈரான் நாட்டின் பல அரசியல் தலைவர்கள், இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.