வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது “விடுதலை” திரைப்படம்.
இத்திரைப்படத்திற்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். திரைப்படத்தைப் பார்த்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படத்தைப் பற்றி டிவிட்டரில் “விடுதலை… இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையாராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.