அமெரிக்காவில் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவிலுள்ள டான்வில்லி பகுதியில் 38 வயதான பெண் ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது 16 வயதுள்ள இரண்டு மாணவர்களுடன் அவர் மூன்று முறை உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதேபோல் 32 வயதான ஹீடர் கேர் என்ற பெண் ஆசிரியரும் டீன் ஏஜ் மாணவருடன் பாலியல் உறவு இருந்ததாக பத்திரிகை ஒன்று தெரிவித்தது. இதுகுறித்து போலீசார் அப்பள்ளியில் விசாரணை செய்த போது மாணவர்களுடன் பாலியல் உறவிலிருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றவர்கள் இச்சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.