ஒரு கிராமத்துக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலியான சம்பவம் நைஜீரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பல குழுவினர் அரசுக்கும், மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி, அப்பாகி மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், ஆயுதம் ஏந்திர குழுவினர் கிராமத்தில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.