ஆப்கானிஸ்தான் நாட்டில் சரக்கு வண்டி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 15 பேர் உயிரிழப்பு!

Filed under: உலகம் |

ஆப்கானிஸ்தான் நாட்டில் சரக்கு வண்டி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்து அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்கள், கார்கள் மற்றும் பல பொருட்கள் மிகவும் சேதம் அடைந்து உள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது வரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 க்கும் மேலானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.