கல்வி நலத்திட்ட விழாவில் நடிகர் விஜய் பேசியதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தலைமை தொண்டரணியை சேர்ந்த ரசிகர்களுக்கு அம்பேத்கார் புத்தகங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி வருகின்றனர். இன்று இரவு 11.59 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதியில் விஜய் தலைமை தொண்டரணி சார்பில் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர். மேலும் இன்று தொகுதி முழுவதும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க உள்ளனர். அப்போது பேட்டியளித்த தலைமை தொண்டரணி மாவட்ட தலைவர் விக்கி கூறும் போது “கல்வி நலத்திட்ட விழாவில் தளபதி விஜய் பேசியது புதிய உத்வேகத்தை அளித்ததாகவும், அதனை தொடர்ந்து அம்பேத்கார், பெரியார், காமராஜர் ஆகியோரை தேடி படிக்க துவங்கியுள்ளோம். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த உன்னத தலைவர்களின் சிந்தனைகளையும், புத்தகங்களையும் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம். விஜய் பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் தங்கத்துடன் பிறந்ததாய் இருக்க மாவட்டம் முழுவதும் மோதிரம் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.