தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.
இது குறித்து விளக்கமளித்தபோது அவர், “விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர்களை சந்திக்கவில்லை” ஆனால் தமிழக முதலமைச்சர் தனி விமானத்தில் தான் பீகாரருக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் விளக்கத்தில் “செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் எந்த நோக்கத்துடனும் நான் வெளியேறவில்லை, நன்றி கூறும் வரை கூட்டத்தில் இருந்தேன், அதன்பின் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதால் வெளியே வந்தேன்” என்று அவர் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் பாட்னா சென்றிருந்த நிலையில் எந்த விமானத்தை பிடிப்பதற்காக அவர் அவசர அவசரமாக செய்தியாளர்களை கூட சந்திக்காமல் வெளியே வந்தார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பி உள்ளனர்.