புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ முத்துராஜா இரங்கல்.

Filed under: தமிழகம் |

புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ முத்துராஜா இரங்கல்.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஜெயந்தி.  புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர்.  இவர் சில மணி நேரத்துக்கு முன்பு பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி ஆகியுள்ளார்.

இவருடைய இறப்பு செய்தி கேட்டு புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா, சற்று முன்னர் இருசக்கர வாகன விபத்தில் செவிலியர் ஜெயந்தி சிக்கி மறைவுற்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்காக அவர் ஆற்றிய பணி அளப்பரியது, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உடன் பணியாற்றுபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.