6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேபாள நாட்டில் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் காத்மாண்டுவிலிருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது. இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
Related posts:
பாகிஸ்தான் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்: 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பரிதாப ப...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்பும், மெலனியாவும் விரைவில் குணமடைய வேண்டும் - வடகொரிய அதிபர் க...
பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவு!
அப்துல் கலாம் வந்த மே 26ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்த - சுவிட்சர்லாந்து!



