தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் இரண்டாம் பாகத்தை நேற்று வெளியிட்ட இதுகுறித்த ஆதாரங்களையும் அவர் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. திமுக தரப்பில் இதுகுறித்த பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேட்டியில், “அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. நான் கூட சொல்லலாம் அண்ணாமலை ரூ.2,500 கோடிக்கு பினாமி என்று. ஆனால், அதனை நாம் நிரூபிக்க வேண்டும். திமுக எதையும் சந்திக்க தயார். அண்ணாமலை ஒரு காலி பாத்திரம். மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே இது போன்ற புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இப்புகாரால் மக்கள் அண்ணாமலைக்கு வேறு வேலையே இல்லையா என நினைப்பார்களே தவிர, திமுகவிற்கு இதனால் எந்த அவப்பெயரும் ஏற்படாது. திமுகவினர் மீது போட்ட அனைத்து வழக்கையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறோம். நாங்கள் எதையும் சந்திக்க தயார்’ என்று கூறியுள்ளார்.