நவீன நெற்றிக்கண்
  • முகப்பு
  • தமிழகம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • புகைப்படம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்

காங்கிரசுக்கு அடுத்த ஷாக்! ரூ.1700 கோடி அபராதம்!

March 29, 2024 | Filed under: அரசியல்,இந்தியா | Posted by: Shankar U

வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு நான்கு நிதியாண்டுகளுக்கு வருமான வரியை முறையாக தாக்கல் செய்யாததால் 1700 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கி அதிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி தேர்தல் செலவுகளை செய்ய விடாமல் வருமான வரித்துறை தடுக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு நிதி செல்லாமல் தடுத்து நிறுத்தியதும் வருமான வரித்துறையின் செயலே என்று காங்கிரஸ் கட்சியால் குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது நான்காண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதற்காக 1700 கோடி ரூபாயை வட்டியுடன் அபராதமாக செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2017 – 18ம் நிதி ஆண்டிலிருந்து 2021 – 22 நிதியாண்டு வரையிலான நான்காண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. அதனால் வட்டியுடன் அபராதமாக ரூபாய் 1700 கோடியை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே கேஜ்ரிவால் கைது, காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தேர்தல் நடைபெறும் ஒரு நாட்டில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

Related posts:

மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!
பிரேமலா விஜயகாந்த்தின் கேள்வி!
யார் இந்த பாஜக இளம் மாநில செயலாளர்?
இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
Post Views: 53

Related posts:

  1. காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கம்!
  2. வரியை விட அதிகமாக நிதி கொடுத்துள்ளோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  3. கணக்கில் வராத ரூ.200 கோடி!
  4. டில்லியில் கர்நாடக காங்கிரஸ் போராட்டம்!

Related posts:

காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கம்! வரியை விட அதிகமாக நிதி கொடுத்துள்ளோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணக்கில் வராத ரூ.200 கோடி! டில்லியில் கர்நாடக காங்கிரஸ் போராட்டம்!

Facebook

Facebook

Recent

  • காதலனை அறிமுகப்படுத்திய நடிகை மிருணாளினி !
  • பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு
  • எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவு – முதல்வர் விஜய் !
  • கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !
  • அதிக உறுப்பினர்களை சேர்த்தால் சிறப்பு பரிசு! த.வெ.க பக்காவான ப்ளான்?
  • முகப்பு
  • தமிழகம்
  • சினிமா
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • RSS
↑ நவீன நெற்றிக்கண்
- Designed by Web Designing Company in Chennai