நடுக்கடலில் கப்பலில் தீ!

Filed under: இந்தியா,உலகம் |

சரக்கு கப்பல் ஒன்று டச்சு கடல் பகுதியில் தீப்பற்றியுள்ள நிலையில் அதில் பணியாற்றிய 20 இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்த பெரும் பதட்டம் எழுந்துள்ளது.

3000 சொகுசு கார்களை ஜெர்மனியிலிருந்து ஏற்றிக் கொண்டு வந்த பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எகிப்து நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது. இக்கப்பல் டச்சு கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியுள்ளது. கப்பலில் சுமார் 20க்கும் மேல் இந்தியர்கள் பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. இத்தீ விபத்தில் ஒரு இந்திய ஊழியர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீயை அணைக்கவும், ஊழியர்களை காப்பாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் சிக்கிய மற்ற 20 இந்திய பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரிய வரவில்லை. இதனால் பெரும் பதட்டம் எழுந்துள்ளது.