ராகுல் காந்தியின் அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்திற்கு ராகுல் காந்தி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி மீது மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதனால் அவரது எம்பி பதவி பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அதிகபட்ச தண்டனை கொடுத்தது தவறு என்றும் அதற்கான காரணத்தை கிழமை நீதிபதி தெரிவிக்கவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் கிழமை நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு செல்லப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.