ஆந்திர மாநிலத்தில் மொபைலில் இருந்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்!

Filed under: இந்தியா |

ஆந்திரா பிரதேச மாநிலத்தில் மொபைல் மூலம் காவல்துறையிடம் புகார் அளிக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி துவங்கி வைத்தார்.

அந்த செயலிக்கு “ஏபி போலீஸ் சேவா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மக்கள் தங்களின் புகார்களை இந்த செயலி கொண்டு பதிவு செய்யலாம்.

முதல் தகவல் அறிக்கை, இ-சலான், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஆகிய விவரங்களை பற்றிய நிலையை அறிந்து கொள்ளலாம்.

சாலை விபத்து ஏற்பட்டால் அதை பற்றி தகவலை உடனே பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கும் அடிப்படையில் இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.