நேற்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக வரிசையாக “தர்பார்” மற்றும் “அண்ணாத்த” ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது “ஜெயிலர்.” “பீஸ்ட்” தோல்வி படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கிய படம் என்பதால் முதலில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய ரஜினி அலை வீசியது. இரண்டு நாளில் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிற மொழிகளிலும் பிஸ்னஸ் செய்ய பிற மொழி நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் மற்றும் ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இதுபற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் நெல்சன் “ஜெயிலர் படத்தில் பாலகிருஷ்ணாவையும் ஒரு மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க யோசனை இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.