கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு!

Filed under: இந்தியா |

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்று கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைகளிலும் ஏராளமான கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் விற்பனை செய்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்த இளைஞர்கள் தற்போது மிக அதிகளவில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்களை அணிந்து வருகின்றனர். கிழிந்த கிழிந்த அணிந்து வர மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் மாணவர்களிடம் எழுதி வாங்குவதாக கல்கத்தா ஏசிஜே போஸ் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உடை என்பது எங்கள் சுதந்திரம் என்றும் அதில் கல்லூரி நிர்வாகம் குறுக்கிட கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.