மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படுத்தும் படி பேசக்கூடாது என்றும் அமைச்சர் உதயநிதிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “உதயநிதி ஒரு ஜூனியர், அவர் எந்த அடிப்படையில் இக்கருத்தை கூறினார் என்று எனக்கு தெரியவில்லை, தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கை உள்ளது அந்த நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது. இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமையில் காணும் நாடு, என்னை பொறுத்தவரை சனாதன தர்மத்தை நான் மதிக்கிறேன். சனாதனம் வேதங்களில் இருந்து பிறந்தது, மக்களின் தெய்வம் நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள பல கோயில்கள் சனாதனம் வழியில் தான் கட்டப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.