பள்ளிக்கல்வித்துறை இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளது.
விஜயதசமி தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். அவ்வகையில் இவ்வாண்டு விஜயதசமி தினத்தன்று அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று அரசு பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது, தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.