அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளது எனவும் விரைவில் அதை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேலைபார்க்கும் போட்டோ வீடியோ கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: பாடப் புத்தகத்தின் பக்கங்களை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என அவர் பேசியுள்ளார்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் தேவைப்படும் பாடப் புத்தகங்களை தயார் செய்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.