இன்று தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது கனமழை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம் சுற்றுப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக ஸ்ரீநகர், கனகபரமேஸ்வரி நகர், லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் அப்பகுதி மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். மழைநீர் செல்ல போதிய வடிகால் இல்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டியுள்ளனர். மழை வெள்ளத்தால் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அதேபோல் சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் சென்னை ஓஎம்ஆர் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியுடன் செல்கின்றனர். குறிப்பாக செம்மஞ்சேரி, நாவலூரில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக அப்பகுதி வழியாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம்மடைந்துள்ளனர்.