தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுனருக்கு உத்தரவிடக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. மசோதாக்களை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுனர் ரவி.