இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் துவங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்தியா முழுவதும் 230 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், பயணிகள் அதிகமாக காத்திருப்பதால் சிறப்பு ரயில் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்கத்தை கண்காணிக்க இருப்பதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.