ஆளுநர் மாளிகை முன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த வழக்கை என்.ஐ.ஏ முன்வந்து எடுத்தது.
காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவு ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் உள்ள ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து கிண்டி போலீசார் வழக்கு ஆவணங்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் கிண்டி போலீசார் வழக்கு ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு பேசிய வழக்கின் ஆவணங்களை பெற்ற பின் என்.ஐ.ஏ இவ்வழக்கை முழுமையாக விசாரிக்கும் என்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் அவருடைய பின்னணி குறித்து விசாரணை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.