பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழக திமுக அரசியல் எப்படியாவது சண்டை போட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற திட்டத்தில் ஓட்டைகள் போட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சென்னை வெள்ளம் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றை மிக மோசமாக கையாளப்பட்டது என அனைவருமே பேச ஆரம்பித்துள்ளனர். மழையால் தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது மத்திய அரசு முதன் முதலாக மழை வெள்ளத்திலிருந்து ஒரு மாவட்டம் வெளியே வருவதற்கு முன்பாகவே மத்திய அரசின் குழு 20ம் தேதி வந்து ஆய்வு செய்ய வந்துவிட்டது. அதன் பின் தான் தமிழக முதலமைச்சர் 21ம் தேதி வருகிறார். இந்த ஒரு விஷயமே எந்த அளவிற்கு அக்கறையின்மை அலட்சியத்தன்மை எதையும் பொருட்படுத்தாமல் ஒரு முதலமைச்சர் திமுக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல முடியாது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த பேரிடருக்கும் தேசிய பேரிடர் என கொடுக்கவில்லை தமிழக சுனாமிக்கோ ஒரிசாவில் வந்த கோரமான புயலுக்கோ புஜ்ஜி பூகம்பம் ஆகியவற்றிற்கோ தேசிய பேரிடர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை தேசிய பேரிடர் என பெயரை பயன்படுத்த சட்டம், விதி கிடையாது. அதற்கான முகாந்திரம் இல்லை. ஆனால் பேரிடரில் தேவைப்படும் உதவியை மத்திய அரசு தயாராக உள்ளது. தான் மத்திய அமைச்சர் எம்.முருகன் சொல்லிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து சேதாரங்கள் தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கொடுத்துள்ளோம். மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அது மிக மிக விரைவில் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை என்று நிதியமைச்சர் தூத்துக்குடி சென்று முழுமையாக பார்த்து நேரடியாக ஆய்வு செய்யவுள்ளார்.
தமிழக அரசு எந்த வேலையும் செய்யவில்லை தமிழக அரசின் ஆலையை பாதிப்பு அதிகமாக இருக்கிறது அவர்கள் தற்போது வரை எந்த அக்கறையும் காட்டவில்லை முழு பொறுப்பையும் மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தமிழக அரசு சரியாக பணிகள் மேற்கொள்ளவில்லை, அதனால் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. திமுகவிற்கு பொய் சொல்வது கைவந்த கலை. திமுக சேலத்தில் இளைஞரணி மாநாடு, இந்தியா கூட்டணியில் பங்கேற்பு ஆகிய பணிகளில் தான் கவனம் செலுத்தியது. இவர்களது கவனம் முழுவதும் முன்னேற்றக் நடவடிக்கையில் இல்லை கவனம் முழுவதும் சென்னை கார் ரேஸ் சேலம் திமுக மாநாடு இந்தி கூட்டணி ஆகியவற்றில் மட்டுமே இருந்தது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தாலே சிகப்பு எச்சரிக்கையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அவர்கள் கவனம் செலுத்தவில்லை. கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் முன் கூட்டியே சொல்லவில்லை என அபத்தமான விவாதத்தை இந்திய அரசியலில் யாருமே இதுவரை பார்த்ததில்லை எந்த அளவிற்கு தமிழகத்தில் திமுக பொறுத்தவரை புயலே வளர்ந்த கட்சி என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கிறது. மழை வந்த பிறகு கூட திருநெல்வேலியின் மேயர் சேலத்தில் இருந்தார் அந்த அளவிற்கு மோசமான ஆட்சி தமிழகத்தில் உள்ளது இவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்பதை தாண்டி இவர்களால் மக்களுக்கு வரக்கூடிய எந்த பிரச்சனைகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் திசை திருப்பும் வேலைகளை மட்டுமே செய்கிறது. உதயநிதியை பொருத்தவரை ஒரு பேட்டன் வைத்துள்ளார் சனாதனத்தை பற்றி நான் தவறாக பேசவில்லை என்றால் அதன் விளைவு இந்தி கூட்டணி என்ற கூட்டணி மொத்தமாக இந்தியா முன்பு தலை துணிந்து கைகட்டி நின்று கொண்டிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் திமுகவை சுக்கு நூறாக பீஸ் பீசாக்கி மூட்டை கட்டி கடலில் வீச பார்க்கிறார். உதயநிதி தொடர்ந்து சொல்லட்டும் அவர் சொல்வது தமிழக மக்களுக்கு நல்லது திமுக இன்னும் தீய சக்தியை அப்புறப்படுத்துவதற்கு நமக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. சிறுகுரு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக முதல்வரை சந்திக்க மாட்டோம். 1-2 முறை கேட்டும் அனுமதி கொடுக்காததால், கம்யூனிஸ்ட் போல அழையா விருந்தாளியாக நாங்கள் போக மாட்டோம். எங்களை முதலமைச்சர் மதிக்காவிட்டால் நாங்கள் முதலமைச்சரை மதிக்க மாட்டோம். நாங்கள் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகளோ கிடையாது. மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க போராட்டம் நடத்துவோம். சாவியை தொலைத்த இடத்தில் தேட வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் எதற்கு?” என்று பேசினார்.