நேற்றிரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இத்தகவல் தெரிந்தவுடன் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை வளாகத்தில் குவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் தேமுதிக தலைவர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், விஜகாந்த் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சட்டபமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவரது இறுதி பயணத்திற்கு சகல அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவித்ததோடு “திரையுலகின் சகாப்தம் விஜயகாந்த்” என்று அவர் தெரிவித்துள்ளார்.