சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபா நாயகன்’. மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை உள்ளிட்டவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதை டீசர் மற்றும் டிரெயிலர் கோடிட்டு காட்டியது.

இத்திரைப்படம் “சலார்” ரிலீசான நாளில் டிசம்பர் 22ம் தேதி ரிலீசானது. தமிழகத்தில் 180 திரையரங்குகளில் மட்டுமே ரிலீசான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது இரண்டாவது வாரத்தில் இப்படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “சலார்” படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்ததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் இந்த வாரம் 11 புதிய படங்கள் ரிலீசாகவுள்ளன.



