சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி வரி வசிலிப்பில் முறைகேடு செய்த இரு அதிகாரிகள் சிக்கினர்.
நேற்று மாலை புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள வணிகவரி வளாகத்தில் சென்னையிலிருந்து 3 கார்களில் வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பெண் அதிகாரி ஒருவரை சென்னை சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் முறைகேடு செய்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் ஆகியோர் மீது ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை இன்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் சிபிஐ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து செல்வார்கள் என தெரிகிறது. வணிக வரி வளாகத்தில் நேற்று மாலை வரையிலும் இன்று காலை முதல் அலுவலகத்திற்கு உள்பக்கமாக பூட்டு போட்டு இச் சோதனை நடக்கிறது. இதனால் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படாததால் வணிக வரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.