நடிகர் சிம்பு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார்.
கடந்த மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைமை கழகத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் இல்லத்திற்கு அவர் நேரில் சென்றார். அங்கு, பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த கேப்டனின் புகைப்படத்திற்கு நடிகர் சிம்பு மரியாதை செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் இரண்டு மகன்களும் உடனிருந்தனர்.